தமிழகத்தில் ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 834 பேரில் 700க்கும் மேற்பட்டவர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தகவல் வெளியான நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 77 பேருக்கு கொரொனா தொற்று இருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் தற்போது செயலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.
உயர்ந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகைக் கடை திறந்திருக்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக, ரேசன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 500 விலையிலான மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.