Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவு கொட்டிய மருத்துவமனை மீது நடவடிக்க எடுக்காவிட்டால்! கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!

Prasanth Karthick
வியாழன், 2 ஜனவரி 2025 (14:53 IST)

தமிழக எல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருத்துவமனை மீது எடுத்த நடவடிக்கை என்ன என கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

 

கேரள - தமிழ்நாடு எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் விவகாரம் பெரும் பிரச்சினை ஆன நிலையில், கேரள அரசு மருத்துவ கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது தொடர்பான வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது வரை 390 டன் மருத்துவ கழிவுகளை 30 ட்ரக்குகள் மூலமாக அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

ALSO READ: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: அண்ணாமலை வெளியிட்ட வீடியோ..!

 

ஆனால், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் மருத்துவமனை மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மருத்துவமனை மீது தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது பசுமை தீர்ப்பாயம்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் மோதலில் ஈடுபடுவது நல்லதல்ல: கார்த்தி சிதம்பரம்..!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: அண்ணாமலை வெளியிட்ட வீடியோ..!

அண்ணா பல்கலை சம்பவத்தில் மவுனம் ஏன்: தி.மு.க., எம்.பி., கனிமொழி எங்கே? குஷ்பு கேள்வி

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை: வானிலை ஆய்வு மையம்..!

எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை: உறுதி செய்தது ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்