Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டியில் இருப்பது பாலைவன வெட்டுக்கிளிகளா?

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (15:04 IST)
தமிழகத்தில் புதிய ரக வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பீதி அடைந்துள்ள நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில்தான் இதுவரை இருந்துவந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் இதனால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று. 
 
2019 ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரிவரை தொடர்ந்தது. இதனால், அந்த மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. 
 
ஆனால், வெட்டுக்கிளி படையெடுப்பைப் பொறுத்தவரை அவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துடன் நின்றுவிடுவதே வழக்கமென்றும் தக்காணப் பீடபூமியைத் தாண்டி தமிழகம்வரை வந்ததில்லையென்றும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. 
 
ஆனால், உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியை பிடித்த வியாபாரிகள், இது வடமாநிலங்களில் வேளாண் பயிர்களை அழிக்கும் ரகத்தை சேர்ந்ததாக இருக்குமோ என அச்சமடைந்தனர்.  
 
எனவே அந்த வெட்டுக்கிளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதகையில் பிடிபட்டது பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என முதற்கட்ட சோதனையில் தெரியவந்திருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments