தென் கொரியா: திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட பள்ளிகள்

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (14:46 IST)
தென் கொரியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அங்கு 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் 56 புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
 
பெரும்பாலான புதிய தொற்றுகள் தென் கொரியாவின் மிகப்பெரிய இணைய வணிக நிறுவனமான கூப்பாங்கிற்கு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ளது. புச்சியோன் பகுதியில் உள்ள இந்த கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களின் உடைகள் மற்றும் காலணிகளில் இருந்து கொரோனா வைரஸை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
 
இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் உள்ள மற்ற சேமிப்பு கிடங்கில் பணியாற்றுபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
 
புச்சியோன் பகுதியில் திறக்கப்பட்ட 251 பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது. தலைநகர் சொலில் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது தாய் கூப்பாங் சேமிப்பு கிடங்கில் பணியாற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

நடிகை கரீஷ்மா கபூரின் குழந்தைகளின் வழக்கு: நாடகத்தைத் தவிர்க்க உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

ஸ்கேன் செய்ய வந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மருத்துவர் தலைமறைவு ..

செங்கோட்டை குண்டுவெடிப்பு.. மருத்துவர் மட்டுமல்ல, எம்பிபிஎஸ் மாணவரும் கைது ..!

அடுத்த கட்டுரையில்
Show comments