குளத்தில் விழுந்த மூதாட்டி - உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்கள்

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (17:31 IST)
கை கழுவ சென்ற போது குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த மூதாட்டியை இளைஞர்கள் சிலர் தங்களின் உயிரை பணயம் வைத்து நூலிழை நேரத்தில் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழவைத்துள்ளது. 
பட்டுக்கோட்டை  காசாங்குளத்தில் மூதாட்டி ஒருவரின் உடல் தண்ணீரில்  மிதந்து கொண்டிருந்தது. உயிரிழந்துவிட்டதாக நினைத்த அப்பகுதி மக்கள் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வேடிக்கை பார்த்தும், செல்போனில் படம் பிடித்தும் வந்துள்ளனர்.
 
பிறகு  தீயணைப்பு படையினர் சடலம் என்று நினைத்து மூதாட்டியை குளத்திலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்து, நாடியை பிடித்து பார்த்தபோது உயிர் இருப்பதை அறிந்தனர். பிறகு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்ல ஆட்டோவை அழைத்துள்ளனர். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச செல்ல முன்வராமல் சென்றுவிட்டார்.
 
இதனை கண்டு விரக்தி அடைந்த விக்கி, சிவா உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மூதாட்டியை தங்களது இருசக்கர வாகனத்திலேயே தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
 
உரிய நேரத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி தீவிர சிகிச்சை மூலம் உயிர்பிழைத்துள்ளார். உயிரை துச்சமென மதித்து மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments