Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

200 இடங்களுக்கு மேல் வெள்ளம் சூழும்? சென்னைக்கு எச்சரிக்கை

200 இடங்களுக்கு மேல் வெள்ளம் சூழும்? சென்னைக்கு எச்சரிக்கை
, புதன், 31 அக்டோபர் 2018 (15:55 IST)
வடகிழக்கு பருவமழை இன்று துவங்கும் நாளை துவங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக நாளை முதல் துவங்கவுள்ளது.  
 
அடுத்து 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என,  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பருவமழை துவங்கிய முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை சற்று ஜோராக இருக்கும் என தெரிகிறது. 
 
இந்நிலையில், மழையின் அளவும் எவ்வளவு இருக்கும் என தெரியாததால் சென்னையின் பல பகுதிகளில் தேவையான வடிகால் வசதி செய்யப்பட்டு வருகிறது.
 
அதன்படி, பெருங்குடி, பள்ளிக்கரணை, வேளச்சேரி ராம் நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, அரும்பாக்கம், அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், ஆலந்தூர், மணப்பாக்கம், வளசரவாக்கம், ராயபுரம், மாதவரம், வியாசர்பாடி, திருவொற்றியூர் என மொத்தம் 200 பகுதிகள் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பிட்டப்பட்டுள்ள இடங்களில் உள்ள வார்டு அலுவலகங்களில் தேவையான ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் இருக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேரத்த கொறச்சா எப்படி மாசு குறையும்? – பொதுமக்கள் கேள்வி