Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமியை கடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (11:59 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்ய கடத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜிஞ்சம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் மூர்த்தி மற்றும் காவ்யா. இவர்கள் மூர்த்தியின் முதல் மனைவியின் 16 வயது மகளோடு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த குடும்பம் திருவண்ணாமலையில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் நாளன்று வாக்குப் பதிவு செய்ய வந்த போது சிறுமி பேருந்து நிலையம் அருகே காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து  திருவண்ணாமலை மாவட்டம் நாகனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் சரண்ராஜ் (31)  என்பவர் மேல் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் பெற்றோர் புகாரளிக்க, போலிஸார் விசாரணை செய்து சரணைக் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments