Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கு வர வேண்டாம் - இந்த புது அறிவிப்பு யாருக்கானது??

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:43 IST)
கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதே போல கல்லூரிகளும் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே ஒரு சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாவதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 
 
எனவே, தற்போது மாவட்ட கல்வி அதிகாரிகள் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் அருகில் உள்ள கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை செய்து கண்டறிந்த பின்னர் உடல் நலம் தேறிய பின், பள்ளிக்கு வந்தால் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments