Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’பேஷண்டுக்கு போடவேண்டிய ஊசி, சாதா மனிதனுக்கு’ - தமிழிசைக்கு ருத்ரன் பதிலடி

Advertiesment
’பேஷண்டுக்கு போடவேண்டிய ஊசி, சாதா மனிதனுக்கு’ - தமிழிசைக்கு ருத்ரன் பதிலடி
, சனி, 19 நவம்பர் 2016 (20:37 IST)
கடந்த 08ஆம் தேதி பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும் சில்லறையாக மாற்றுவதில் பெரும் சிரமம் நீடித்து வருகிறது.

இது குறித்து கூறிய, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ”சாமானியர்கள், நடுத்தர மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவே பிரதமர் மோடி இப்படி ஒரு அறிவிப்பை செய்திருக்கிறார். இதனால் சாதாரண மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றால் உண்மைதான்.

ஆனால் என்ன செய்வது? நான் ஒரு மருத்துவர். கொள்ளை நோய் வரப் போகிறது என்றால் தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஊசி போட்டால் வலிக்கும் என்றால் எப்படி நோயை போக்க முடியும்.

அப்படித்தான் இதுவும். மக்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் உங்களுக்கு பெரும் நன்மைகள் வரப் போகிறது" என்று கூறினார்.

இது குறித்து காட்டமாக விமர்சித்துள்ள தமிழகத்தின் பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூல் பக்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:

மடஜன்மங்களுக்கு - ஒழுங்காய் ஊசிபோட்டால், போடும்போது மட்டுமே வலிக்கும். கோணலாய். தப்பாய் போட்டால் ஒரு வாரத்துக்குமேல் வலிக்கும், சிலசமயம் வீங்கி சீழ் கோக்கும்....

ஒரு வாரத்துக்கு மேலாச்சு ஊசிபோட்டு. இன்னமும் வலித்தால், சீழுக்கு மருந்து சிபாரிசித்தால் அது போட்டவனின் அரைகுறை அறிவையே காட்டுகிறது.

இன்னும் யோசித்தால் தெரியும். ஏஸி அறை பேஷண்டுக்குப் போடவேண்டிய ஊசியை, வரிசையில் காத்திருக்கும் சாதா மனிதனுக்குப் போட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகள் திருமணத்திற்கு பணம் கிடைக்காத அதிர்ச்சியில் தந்தை மரணம்