ரம்ஜான் தொழுகைகளை வீடுகளில் நடத்துங்கள்! – தலைமை காஜி அறிவிப்பு!

Webdunia
புதன், 20 மே 2020 (11:37 IST)
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் தொழுகைகளை வீடுகளில் மேற்கொள்ள தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 25 அன்று இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று அனைத்து இஸ்லாமியர்களும் மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்துவது வழக்கம். இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இஸ்லாமிய மக்களிடையே இருந்து வந்தது.

இந்நிலையில் ரம்ஜான் அன்று மசூதிகள் திறக்கப்படாது என்றும், ஊரடங்கு அமலில் உள்ளதால் இஸ்லாமிய மக்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தலைமை காஜி சலாஹுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

உரம் வாங்க 2 நாட்கள் வரிசையில் நின்ற பெண் உயிரிழப்பு.. இப்படியும் ஒரு ஆட்சியா?

பிணத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் பொம்மைக்கு இறுதிச்சடங்கு.. பின்னணியில் ரூ.50 லட்சம் மோசடி..!

செங்கோடையன் சட்டையில் ஜெயலலிதா படம்!. ஸ்கோர் பண்ணிய விஜய்!....

அடுத்த கட்டுரையில்
Show comments