Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

college students
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (18:04 IST)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் கடந்த சில நாட்களாக விண்ணப்பங்கள் பதிவு செய்த நிலையில் தற்போது கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது
 
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் உள்பட கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் தகுந்த ஆவணங்களை மாணவர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது
 
 இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதாகவும் ஆனால் 163 அரசு கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கலந்தாய்வு முடிந்த உடன் இதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்றும் கலந்தாய்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை!