உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு தேதி நெருங்கி வருகிறது. அதுவரை கவர்னர் காத்திருக்க வேண்டும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ”அதிமுகவுக்கு தனது சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்ய எல்லா உரிமையும் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மக்களும் தகுதியானவர் யார் [ஓ.பன்னீர்செல்வமா? அல்லது சசிகலாவா?] என்பதை தேர்ந்தெடுக்கு உரிமை உள்ளது.
இதே கேள்வியைத்தான் கவர்னரும் கேட்க வேண்டும். ஒருவேளை, சசிகலா தகுதியானவர் என மீண்டும் வலியுறுத்தப்பட்டால், நல்லது, உங்களது கருத்தை மேலிடத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்கிறேன் என்று சொல்ல வேண்டும்.
நான் அரசியல் சட்ட நிலைப்பாட்டையும், நெறிமுறையையும் பார்த்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது. ஆகவே, சிறிது நாட்கள் பொறுத்திருங்கள் என்று கவர்னர் கூற வேண்டும். 5 மணிக்குள்ளே உடனடியாக அளுநர் தனது முடிவை எடுக்க வேண்டும் என்று எந்த கடமைப்பாடும் கிடையாது.
ஏனென்றால், சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு தேதி நெருங்கி வருகிறது. அதுவரை கவர்னர் காத்திருக்க வேண்டும். ஒருவேளை, சசிகலாவுக்கு தகுதியிழப்பு ஏதும் ஏற்படாவிட்டால், அப்போது அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய கடமை, கவர்னருக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.