Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்ற உத்தரவின் ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

ஆளுநர் ஆர்.என்.ரவி  உச்சநீதிமன்ற உத்தரவின் ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும் - ப.சிதம்பரம்
, வெள்ளி, 24 நவம்பர் 2023 (15:45 IST)
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி  உச்ச நீதிமன்ற உத்தரவின் ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

''தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை'' என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், ''காரணம் எதுவும் கூறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பியதால் அவற்றிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். காரணம் எதுவும் கூறாததால் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் ஆளுநரால் அனுப்பிவைக்க முடியாது.

காரணத்தோடு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தால் மட்டுமே மீண்டும் திருப்பி அனுப்பும்போது, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்'' என அதிரடியாக  கருத்து தெரிவித்தது.

இதுகுறித்து  முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதரம்பரம் கூறியுள்ளதாவது:

மாநில ஆளுநர்களின் அதிகாரம்  பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி அனைத்து ஆளுநர்ரகளுக்குமானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. உத்தரவின் ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும்.. திறமையான மூத்த வழகறிஞர் ஒருவரை அழைத்து அதனை விளக்கும்படி உதவி கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவத் மான்  தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வரும் நிலையில்,  இம்மாநிலத்தில் ஆளுனராக பவாரிலால் புரொஹித் பணியாற்றி வருகிறார். பஞ்சாப் ஆளுனருக்கு எதிராக பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில்,  ' மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும் ?' என என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மசூதிகள் மேல் கை வைக்கக்கூடாது..! – டிசம்பர் 6ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!