Publish Date: Fri, 25 Aug 2023 (14:14 IST)
Updated Date: Fri, 25 Aug 2023 (14:16 IST)
ஆங்கிலேயர்களால் தான் ஜாதி மதம் பிரிக்கப்பட்டது என தமிழக கவர்னர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
நொய்யல் பெருவிழாவில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது. அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகு நாம் தனித்து விடப்பட்டோம் என்றும் ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகு இந்தியர்கள் ஜாதி மதம் என பிரிக்கப்பட்டோம் என்றும் தெரிவித்தார்.
அந்நியர்கள் தான் ஆரியன் திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள் என்றும் தண்ணீரை அன்னையாக பாவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரத்தின் உயிர் தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் தான் வந்தனர் என்றும் அவர் கூறினார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது