ஆசிரியர்களை மரபு படி குரு என்று தான் அழைக்க வேண்டும் என தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
எண்ணித் துணிக என்ற நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியபோது நமது நாட்டில் காலம் காலமாக ஆசிரியர்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அவர்களை மரபு படி குரு என்று தான் அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்
நான் ஒரு நாளைக்கு எட்டு கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு செல்வேன் என்றும் நான் என்னுடைய ஆசிரியரின் வீட்டில் தண்ணீர் இறைத்து கொடுத்துள்ளேன் அவர் உறங்கும் போது கால்களை அழுத்தி சேவை செய்து உள்ளேன் என்று தெரிவித்தார்.
இது நமது கலாச்சாரமாக இருந்தது என்றும் ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் ஆசிரியர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மரபு இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.