தமிழக சட்டசபை இன்று கூடிய நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் அமைதியாக அமர்ந்திருப்பதாகவும் இதனை அடுத்து ஆளுநருக்கு பதிலாக அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்று கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்ததாகவும் அவர் அமைதியாக சட்டமன்றத்தில் உட்கார்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தேசிய கீதம் முதலிலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் அவையில் அமைந்திருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை சபாநாயகர் பட்டியல் இட்டு வருகிறார். தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்ததால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது