Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுநர் கூறிய இறுதி பதில்..அதிர்ச்சியான சசிகலா... நடந்தது என்ன?

ஆளுநர் கூறிய இறுதி பதில்..அதிர்ச்சியான சசிகலா... நடந்தது என்ன?
, வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (11:54 IST)
தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் வித்யாசாகரிடம் 5 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
தமிழகத்தின் ஆட்சியை அமைக்கப் போவது ஓ.பன்னீர் செல்வமா? அல்லது சசிகலாவா? என்பதைத்தான் தமிழகம் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. 
 
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் நேற்று ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக எம்.எ.ஏக்கள் 129 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதால், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனவும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல், அதிமுக எம்.எல்.ஏக்களை சட்ட விரோதமாக, கடத்திச் சென்று சசிகலா தரப்பு சிறை வைத்துள்ளதாக ஓ.பி.எஸ் ஆளுநரிடம் முறையிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சசிகலா வெற்றுக் காகிகத்தில் கட்டாயப்படுத்தி அதிமுக எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு, அது தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சில போலி கையெழுத்து எனவும் ஓ.பி.எஸ் தரப்பில் ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. 
 
எனவே, சசிகலா அளித்துள்ள ஆதரவுக் கடிதத்தில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களின் கையெழுத்தை அதிமுகவின் முக்கிய மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டசபை சபாநாயகர் ஆகியோரை வைத்து ஆளுநர் பரிசோதிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு சசிகலா தரப்பும் ஒத்துக் கொண்டதாக தெரிகிறது.
 
அதேபோல், தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க ஓ.பி.எஸ் 5 நாட்கள் நேரம் கேட்டுள்ளார் என சசிகலாவிடம் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ளாத சசிகலா, 129 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், தன்னையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இறுதியாக பேசிய கவர்னர், உங்ளை ஆட்சி அமைக்க அழைக்கிறேன். ஆனால், ஓ.பி.எஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் புகார் குறித்து முடிவெடுக்க தனக்கு நேரம் வேண்டும். எனவே, பொறுத்திருங்கள்” என ஆளுநர் கூறிவிட்டதாக தெரிகிறது...
 
அதிமுக எம்.ல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை காட்டியவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என நம்பிக்கொண்டிருந்த சசிகலா தரப்பு, ஆளுநரின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. இறந்த நிலையில் தான் கொண்டு வரப்பட்டார்: போட்டுடைத்த அப்பல்லோ மருத்துவர் (வீடியோ)