Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்டத்தை ஆராயாமல் ஓபிஎஸுக்கு அநீதி இழைத்த ஆளுநர்?: பதவி பறிபோன பகீர் பின்னணி!

சட்டத்தை ஆராயமல் ஓபிஎஸுக்கு அநீதி இழைத்த ஆளுநர்?: பதவி பறிபோன பகீர் பின்னணி!

சட்டத்தை ஆராயாமல் ஓபிஎஸுக்கு அநீதி இழைத்த ஆளுநர்?: பதவி பறிபோன பகீர் பின்னணி!
, திங்கள், 20 பிப்ரவரி 2017 (13:39 IST)
தமிழக முதல்வராக பதவியேற்க வருமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்து பதவி பிரமாணம் செய்து வைத்து அவரது பெரும்பான்மையை சட்டசபையை கூட்டி நிரூபிக்க உத்தரவிட்டார்.


 
 
ஆளுநரின் இந்த முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. இந்நிலையில் ஆளுநர் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையில் உள்ள சட்ட வாய்ப்புகளை ஆராயமல் மக்கள் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்தது சட்டப்படி தவறு என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 
தமிழகத்தில் நிலவியது போன்ற இக்காட்டான சூழல்களில் இதற்கு முன்னர் பல மாநிலங்களில் எஸ்.ஆர்.பொம்மை மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தான் முன் உதாரணமாக எடுப்பார்கள்.
 
இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக சூழலை ஆளுநர் ஆராயமல் பன்னீர்செல்வத்துக்கு அநீதி இழைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி பார்த்தால் ஓபிஎஸை தான் முதலில் ஆளுநர் அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுருக்க வேண்டும். அவர் ராஜினாமா செய்த போது அவருக்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது என்பதையும் அந்த எம்எல்ஏக்கள் தற்போது கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும் ஆளுநர் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
 
முதலில் நேரில் வழங்காமல் பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்ட ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதே தவறு. தன்னை மிரட்டியே ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்ற ஓபிஎஸின் குற்றச்சாட்டை ஆளுநர் விசாரிக்கவே இல்லை. சந்தேகத்தின் பலனை ஆளுநர் ஓபிஎஸுக்கு தான் வழங்கியிருக்க வேண்டும். பன்னீர்செல்வத்தை தான் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுருக்க வேண்டும்.
 
பன்னீர்செல்வம் ஆளுநரிடம் பலமுறை தனக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது எனவும் அவர்கள் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் கையெழுத்து பெற்ற மனுவை சமர்ப்பிக்க முடியவில்லை என கூறியிருந்தார்.
 
மேலும் முக்கியமாக சட்ட நிபுனர்கள் கூறுவது இதில் நம்பிக்கை வாக்கெடுப்பே தேவையில்லை என்பது தான். எம்எல்ஏக்கள் கட்சி மாறியதாக சந்தேகம் ஏற்பட்டால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்பது பொம்மை வழக்கில் தெளிவாக உள்ளது. இதனை வைத்து ஆளுநர் பன்னீர்செல்வத்தின் ஆட்சியை தொடர வைத்திருக்கலாம்.
 
பொம்மை வழக்கை வைத்து பார்த்தாலும், பன்னீர்செல்வத்துக்கே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும். அல்லது அட்டார்னி ஜெனரல் கூறியபடி, இருவரையும் ஒரே நேரத்தில் நம்பிக்கை கோரச் செய்திருக்கலாம். இதனால் ஆட்சி கலையும் என்ற பயமின்றி ஓபிஎஸுக்கு கூட அதிக எம்எல்ஏக்கள் வாக்களித்திருக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரானதும் ஓ.பி.எஸ் செய்யாததை எடப்பாடி செய்தார் - எது தெரியுமா?