Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏழுபேர் விடுதலை – ஆளுநர் மறுப்பா ?

Advertiesment
ஏழுபேர் விடுதலை – ஆளுநர் மறுப்பா ?
, வெள்ளி, 18 அக்டோபர் 2019 (18:57 IST)
ராஜீவ் கொலையில் சிக்கி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலைக்கு ஆளுநர் மறுப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த குண்டு வெடிப்பில் அவரோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய ஏழுப் பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற தமிழக சட்டமன்றம் எடுத்த முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றது. இதையடுத்து அவர்கள் ஏழு பேரும் 27 ஆண்டுகளை சிறையில் வாழ்ந்துவிட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுந்தன.

இதற்கிடையில் ராஜீவ் குண்டுவெடிப்பின் போது அவரோடு சேர்ந்து இறந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தார் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் எழுவர் விடுதலைக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கை நேற்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதனால் இப்போது ஆளுநரின் முடிவே இறுதியானது என்பதால் தமிழக மக்கள் அனைவரும் ஆளுநரின் முடிவுக்குக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் ஆளுநர் மாளிகையில் இருந்து முதல்வருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் ஏழு பேரின் விடுதலைக்கான தமிழக சட்டமன்ற பரிந்துரையை ஏற்க இயலாது  என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஆளுநர் தரப்போ முதல்வர் தரப்போ எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஷ்டிரா, ஹரியானாவில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு முடிவு