காவேரி மருத்துவமனையில் கவர்னர்: கருணாநிதியின் உடல்நலம் கேட்டறிந்தார்

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (10:32 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று நள்ளிரவில் திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் இரவு 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் 20 நிமிடங்கள் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின்னர் அவரது ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடமும் அதன் பின்னர் மு.க.ஸ்டாலினிடமும் கருணாநிதி உடல்நலம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கேட்டறிந்தார்.
 
மேலும் இன்னும் சில மணி நேரத்தில் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களும் சென்னை வரவுள்ளதாகவும், அவரும் காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியை சந்திக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’மோந்தா’ புயல் எப்போது, எங்கே கரையை கடக்கும்? வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்..!

கர்நாடக அமைச்சரவையில் 'காமராஜ் திட்டம்' அமல்? 12 மூத்த அமைச்சர்களுக்குக் 'கல்தா'

அதானிக்கு ரூ.33,000 கோடி ரகசியமாக நிதி வழங்கியதா மத்திய அரசு? வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகளிடம் காட்டவில்லை': நயினார் நாகேந்திரன்

சாலையில் இருந்த குழியால் பெண் வங்கி அதிகாரி பரிதாப பலி.. மோசமான சாலையை செப்பனிடாததால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments