ஆணவக் கொலை செய்யபட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவிற்கு மாதம்தோறும் ரூபாய் 11,250 ஓய்வூதியம்
ஆணவக் கொலை செய்யபட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவிற்கு மாதம்தோறும் ரூபாய் 11,250 ஓய்வூதியம்
உடுமலைப்பேட்டையில் சாதி ஆணவக் கொலை செய்யபட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யாவிற்கு மாதம்தோறும் 11,250 ரூபாய் ஓய்வூதியமும், சங்கரின் தந்தைக்கு சத்துணவுக் கூட்டத்தில் வேலை ஒதுக்கீடு வழங்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி படுகொலை செய்யபட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, சங்கரின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றார். எனவே அவருக்கு தற்போது மனநல சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் அரசின் உத்தரவு ஆறுதல் அளிப்பதாகவும், மேலும் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கவுசல்யா கூறுள்ளார்.
மேலும் தனக்கு ஓய்வூதியத்தை போராடி பெற்றுத்தந்த மதுரை எவிடென்ஸ் அமைப்பிற்கு கவுசல்யா நன்றி கூறினார். ஆணவக் கொலையில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளில் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருப்பது குறிப்பிடதக்கது.