Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150 வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

Advertiesment
தமிழகத்தில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150 வரை உயர்த்தி  தமிழக அரசு உத்தரவு
, சனி, 2 ஏப்ரல் 2022 (15:21 IST)
தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150 வரை உயர்த்தி  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால்  600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு  25  சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடை வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும்  1800 சதுர அடிக்கும்  அதிகமான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்வு செய்யப்படவுள்ளது.               

மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மா நகராட்சிகள் நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.           

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் தமிழர் கட்சியின் சீமான் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!