Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தின் பின் சக்கரங்கள் கழண்டு விழுந்ததால் பரபரப்பு.. ‘கரகாட்டக்காரன்’ காமெடி போல் நிஜ சம்பவம்..!

Mahendran
வெள்ளி, 20 ஜூன் 2025 (12:48 IST)
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கவுண்டமணியின் காரில் சக்கரங்கள் கழன்று ஓடும் காமெடி காட்சி போல், தென்காசியில் அரசு பேருந்து ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பின் சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று ஓடியதால் பயணிகள் கடும் அச்சமடைந்தனர்.
 
தென்காசி மாவட்டம், இடைக்கால் பகுதியில் அரப் பேருந்து ஒன்று 87 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாப் பேருந்தின் பின் சக்கரங்கள் இரண்டும் தனித்தனியாக கழன்று ஓடின. இதனால் பேருந்தில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும், மற்றவர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
பேருந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்ததாலும், பின் சக்கரங்கள் கழன்று விழுந்தவுடன் பேருந்து தரையில் அப்படியே இறங்கிவிட்டதாலும், அப்போது பேருந்துக்கு முன்பும், பின்பும் வாகனங்கள் வராத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  பின்னர், பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு சரி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments