Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தை ஆறு மாதங்களாக தாண்ட முடியாத கோதண்டராமர் சிலை! என்னதான் நடக்குது?

Advertiesment
தமிழகத்தை ஆறு மாதங்களாக தாண்ட முடியாத கோதண்டராமர் சிலை! என்னதான் நடக்குது?
, வெள்ளி, 17 மே 2019 (19:49 IST)
தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு கடந்த டிசம்பர் மாதம் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த கோதண்டராமர் சிலை இன்னும் தமிழக எல்லையையே தாண்ட முடியாமல் தற்போது ஓசூரில் உள்ளது.
 
கர்நாடக மாநில பெங்களூரில் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை ஒன்று அமைக்க முடிவு செய்தது. இந்த சிலையானது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் இருந்து ஒரே கல்லை எடுத்து வடிவைக்கப்பட்டது. இந்த சிலையின் பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருக்கு லாரி ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிலையின் எடை அதிகம் என்பதால் இந்த சிலை பாலங்களை கடக்க தேசிய நெடுஞ்சாலை அனுமதிக்கவில்லை
 
இதனால் பாலங்கள் அருகே தற்காலிக மண் பாதை அமைத்து இந்த சிலை கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்நாடக எல்லையான ஓசூர் அருகே இந்த கோதண்டராமர் சிலை வந்துவிட்டது. ஆனால் இந்த லாரி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்தால் மட்டுமே பெங்களூருக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி தரவில்லை என்பதால் ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் ஆற்றின் குறுக்கே பாதை அமைத்தால் தங்களுக்கு வரும் தண்ணீர் தடைபடும் என்று அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பாதையின் கீழே தண்ணீர் போக குழாய் அமைத்து தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது
 
webdunia
ஆனால் தற்போது அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே மண்பாதை அமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல்களை கடந்து கோதண்டராமர் எப்போது பெங்களூர் கொண்டு செல்லப்படும் என தெரியவில்லை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் டுவிட்டரை ஹேக் செஞ்சிட்டாங்க: கோட்சேவை நல்லவர் என கூறிய அமைச்சரின் அந்தர் பல்டி!