வேகமாக சென்ற அரசு பேருந்து; டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி! – பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (13:29 IST)
கோபிசெட்டிப்பாளையத்தில் நெஞ்சுவலி ஏற்பட்ட போதும் பயணிகளை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தவர் செல்வராஜ். வழக்கம்போல பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தை இயக்கிய செல்வராஜுக்கு செல்லும் வழியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்திலும் பயணிகள் பாதுகாப்பை கருதி பேருந்தை சாலையோரமாக நிறுத்திய செல்வராஜ் மயங்கி விழுந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். உயிரிழக்க சில வினாடிகளே இருந்த நிலையிலும் ஓட்டுனர் செல்வராஜ் பயணிகளை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments