சுந்தர் சி தொல்லையால் பாஜகவில் குஷ்பு? கொளுத்தி போட்ட கோபண்ணா!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (11:00 IST)
கணவர் சுந்தர் சி கொடுத்த அழுத்தத்தாலேயே குஷ்பு பாஜகவில் இணையும் முடிவை எடுத்துள்ளார் என கோபண்ணா பேச்சு. 
 
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருந்து வந்த நடிகை குஷ்புவிற்கும், காங்கிரஸ் கமிட்டியினருக்கும் சில காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன. புதிய கல்விக்கொள்கைக்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்தது, வசந்தகுமார் நினைவஞ்சலிக்கு குஷ்பூ அழைக்கப்படாதது என இரு தரப்பிலும் முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் குஷ்புவின் இந்த முடிவு குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான கோபண்ணா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, குஷ்பு அண்மைக்காலமாகவே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்து காணப்பட்டார். திரைப்படப் படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தார். 
 
நாங்கள் அழைக்கும்போதும் கூட வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருப்பதாகவே தகவல்கள் வந்தன. அவரது கணவர் சுந்தர்.சி தான் தற்போது குஷ்புவை பாஜகவில் இணைய வைத்திருக்கிறார். சொல்ல போனால், அவரது அழுத்ததின் பேரிலேயே குஷ்பு பாஜகவில் இணைய முடிவெடுத்திருக்கக் கூடும் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments