Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவீன குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த நபர்களுக்கு தங்க தந்தை" விருது

Advertiesment
நவீன குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த   நபர்களுக்கு தங்க தந்தை
, திங்கள், 28 மார்ச் 2022 (23:09 IST)
தங்க தந்தை திட்டத்தின்கீழ்குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 11 நபர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர், இ.ஆ.ப. அவர்கள் பாராட்டி "தங்க தந்தை" என்ற விருது மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி, ரூ.5,000 ஊக்கத்தொகையும் வழங்கி அவர்கள் விரும்பும் அரசு நலத்திட்ட உதவிகளை முன்னுரிமை அடிப்படையில்  வழங்க உத்தரவிட்டார்.
 
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் தங்க தந்தை திட்டத்தின் கீழ் ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 11 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர் இ.ஆ.ப. அவர்கள் இன்று (28.03.2022) தங்க தந்தை விருது, ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
பின்னர்  மாவட்ட ஆட்சித் தலைவர் தங்க தந்தை திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் களப்பணி ஆற்றிய செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இடையே தெரிவித்ததாவது: 
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி கரூர் மாவட்டத்தில் தங்க தந்தை திட்டத்தின்கீழ் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (28.03.2022) குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் முகாம் நடத்தப்பட்டு உள்ளது இதில் 11 நபர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள். நாளை 29.03.2022 கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 30.03.2022 அன்று மீண்டும் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையிலும் 31.03.2022 ஒன்று மீண்டும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
 
நமது கரூர் மாவட்டத்தில் தான் முதல் முதலில் தங்க தந்தை திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு தங்க தந்தை விருது, ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தது. தற்போது இதைப் பார்த்து பிற மாவட்டங்களில் நம்மைப் போலவே செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். நாம் இப்போது செயல்படுவதைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு களப்பணி ஆற்றினால் தான் கரூர் மாவட்டம் இத்திட்டத்தில் முதலிடம் பிடிக்க முடியும். எனவே களப் பணியாற்றுபவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் மனைவியிடம் இந்த அறுவை சிகிச்சையினால் எந்த பாதிப்பும் இல்லை என்பதைவிளக்கி, இத்திட்டத்தின்மூலம்   ரூ.5000 ரொக்கம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்பதையும் எடுத்துக் கூறி இத்திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்வரும் வகையில் களப்பணி ஆற்றிட வேண்டும்.

மேலும் தங்க தந்தை திட்டத்திற்காக தற்போதுவரை களப் பணியாற்றி வரும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை குடும்ப நல துறை சார்ந்த பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இத்திட்டத்தில் பயன் பேற வேண்டும் என நினைப்பவர்கள் தங்களது நலன் கருதியும் பொது நலன் கருதியும் கருத்தடை செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . இந்த திட்டம் தொடர்பாக மேலும் விபரங்களுக்கு 9443942304, 9443904031 மற்றும் 9944523334 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இந்நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மரு. ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மரு. சந்தோஷ்குமார், துணை இயக்குனர் குடும்ப நலம் மரு. பிரியா தேன்மொழி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் திரு.சைபுதீன், குளித்தலை வருவாய் கோட்டாச்சியர் திருமதி புஷ்பாதேவி, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை முதன்மை தலைமை மருத்துவர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்