Publish Date: Tue, 10 Aug 2021 (10:13 IST)
Updated Date: Tue, 10 Aug 2021 (10:15 IST)
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதை அடுத்து சென்னையிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது என்பதை பார்த்தோம். நேற்று தங்கம் விலை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4373 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 144 குறைந்து ரூபாய் 34984 என விற்பனையாகி வருகிறது
சென்னையில் இன்று 24 காரட் சுத்தத்தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4737.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 37896.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூபாய் 68.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 68200.00 எனவும் விற்பனையாகி வருகிறது