Publish Date: Tue, 17 Mar 2020 (11:23 IST)
Updated Date: Tue, 17 Mar 2020 (11:24 IST)
தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து ரூ.30,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக விலை உயர்வை சந்தித்த தங்கம் பிறகு மெல்ல பிலை குறைய தொடங்கியது. அதிகபட்சமாக கந்த 13 ஆம் தேதி சவரனுக்கு 1,152 ரூபாய் விலைக்குறைந்த தங்கம் சனிக்கிழமையன்று சவரனுக்கு மேலும் 632 ரூபாய் குறைந்து ரூ.31,472க்கு விற்பனையாகி வந்தது.
ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.228 உயர்ந்து ரூ.31,696 க்கு விற்பனையாகியது. அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.28 விலை உயர்ந்து ரூ.3,962-க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்தது சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.30,960க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.73 குறைந்து ரூ.3870க்கு விற்பனை செய்யப்படுகிறது.