Publish Date: Thu, 24 Sep 2020 (10:42 IST)
Updated Date: Thu, 24 Sep 2020 (10:43 IST)
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை தற்போது மெல்ல குறைந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ,4,755-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.