Publish Date: Tue, 05 Jan 2021 (11:56 IST)
Updated Date: Tue, 05 Jan 2021 (12:06 IST)
தங்கத்தின் விலை இரண்டே நாட்களில் கிராமுக்கு 93 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்றைய காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.352 உயா்ந்து, ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.44 உயா்ந்து, ரூ.4,792 ஆக உள்ளது.
அதையடுத்து இன்றும் கிராமுக்கு 26 ரூபாய் விலையுயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பவுனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.38728க்கு விற்பனையாகிறது.