Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது வாரமாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (11:36 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.  

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.  

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,524-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதாவது 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,792 அளவுக்கு விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments