கலைஞர் அதிகம் உச்சரித்த பெயரே போய்வா! -கவிஞர் வைரமுத்து இரங்கல்

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (18:02 IST)
கலைஞரின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியவர் சண்முகநாதன். இந்நிலையில் உடல் நலக்குறைவால் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார். கடின உழைப்பாளியான சண்முகநாதன், கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் சண்முகம் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்  இரங்கல் பதிவிட்டுள்ளார்.
அதில், அண்ணனே!
சண்முகநாதனே! போய்வா!

அண்ணாவுக்குப் பிறகு கலைஞர்
அதிகம் உச்சரித்த பெயரே
போய்வா!

கலைஞர் ஒலி
நீ எழுத்து

அறிவின் ஆதிக்கமே
அன்பின் நீர்த்தேக்கமே போய்வா!

கட்சி ஆட்சி குடும்பமென்னும்
முக்கோணத்தின்
முக்காலமறிந்த திரிஞானியே

உழைப்பின்
சத்தமில்லாத சரவெடியே
ஓய்வெடு; போய்வா! எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை - மங்களூரு இடையே முதல் ரயில்..!

மகனை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர பெற்ற தாயே கூறினாரா? லிவ்-இன் துணைவர் தூண்டுதலா?

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments