Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் அணியில் ஜி.கே.வாசன்: ஆர்கே நகர் தேர்தலில் திடீர் திருப்பம்!

ஓபிஎஸ் அணியில் ஜி.கே.வாசன்: ஆர்கே நகர் தேர்தலில் திடீர் திருப்பம்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (12:21 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கு ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் காட்சி ஆதரவு தெரிவித்து அவருக்காக பிரச்சாரம் செய்ய உள்ளது. இது மதுசூதனனுக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.


 
 
ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தங்கள் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடாது எனவும், யாருக்கும் இந்த தேர்தலில் ஆதரவு இல்லை எனவும் அறிவித்தார்.
 
இதனையடுத்து மற்ற கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் சசிகலா அணியின் வேட்பாளர்களான டிடிவி தினகரன் மற்ற கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்து தனக்கு ஆதரவு கேட்டார். அதே போல சசிகலா கும்பலை துரத்த அனைத்து கட்சிகளும் தங்களுக்கு ஆதரவு தர வேண்டாம் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார்.
 
இந்நிலையில் இந்த தேர்தலை புறக்கணித்து யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் ஓபிஎஸ். தங்கள் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவு தருமாறு அவரிடம் கோரிக்கை வைத்தார்.
 
இதனையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் மதுசூதனனை ஆதரித்து அவருக்கு பிரச்சாரம் செய்ய என ஓப்புக்கொண்டது. இது ஆர்கே நகர் தேர்தலில் மதுசூதனனுக்கு மேலும் செல்வாக்கை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments