Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிள் இல்ல தென்னந்தோப்ப வச்சிகோ.. ஓகே சொன்ன ஜி.கே.!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (13:14 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். 

 
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.    
 
அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. 
 
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். 
 
சைக்கிள் சின்னத்தை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பெற்றுவிடுவார் என எதிர்பார்த்த அவரது கட்சி நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்தாலும்,  ஊரகப்பகுதியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த சின்னம் கைகொடுக்கும் என நிர்வாகிகள் எதிர்ப்பார்த்தும் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments