இந்த ஆண்டு வெளியான பத்தாம் வகுப்பு தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ல எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி பிரேமசுதா மற்றும் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளி குளத்தில் உள்ள நோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் சிவக்குமார் ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
50 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்திலும், 224 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மொத்தமாக பார்க்கும் போது 93.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளெ அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.3 சதவீதமும், 95.9 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இருந்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90.5% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 91.3% அதிகரித்துள்ளது.