Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு.. 3 பேர் அதிரடி கைது..!

Shawarma
, திங்கள், 18 செப்டம்பர் 2023 (16:38 IST)
நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிர் இழந்த நிலையில் இந்த விவகாரத்தில் மூன்று பேர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் 
 
நாமக்கல் பகுதியில் உள்ள பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் 14 வயது சிறுமி சவர்மா சாப்பிட்ட நிலையில் அவர் திடீரென வாந்தி மயக்கம் எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவர் சிகிச்சையின் பலன் இன்றி காலமானார். 
 
இதனை அடுத்து சவர்மா கடையில் அதிரடியாக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் உணவக உரிமையாளர் நவீன் குமார் உள்பட 3 பேருக்கு கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
14 வயது சிறுமி மட்டுமின்றி அந்த உணவகத்தில் சாப்பிட்ட மேலும் ஒரு சிலர் உடல் உபாதை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உணவகத்தில்  மட்டுமின்றி உணவகத்திற்கு இறைச்சி சப்ளை செய்த கடையிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் வங்கிக் கணக்கில் ரூ 50 ஆயிரம் போட்டிருந்தார்கள்: விஜயலட்சுமி தகவல்..!