நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தற்போது அதில் கல்வித்துறை எவ்வளவு கவனக்குறைவாய் இருந்துள்ளது என தெரிவந்துள்ளது.
தேர்வு முடிவுகள் குறித்து தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பென்னாகரம் அரசு பள்ளியில் திருநங்கை ஒருவர் 450 மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
திருநங்கை ஒருவர் 450-க்கு மேல் மதிப்பெண் எடுத்ததால் பத்திரிக்கையாளர்கள் அங்கு விரைந்தனர். ஆனால், அங்கு சென்ற பின்னர் தான் அவர் திருநங்கை அல்ல என்பது தெரியவந்தது.
சங்கீதா என்னும் அந்த மாணவியின் பாலினத்தை கணிணியில் பதிவு செய்யும் போது தவறுதலாக பெண் என்பதற்கு பதில் மூன்றாம் பாலினத்தவர் என பதிவேற்றுயுள்ளனர்.
இந்த சம்பவத்தால் நல்ல மதிப்பெண் பெற்றும் அந்த மாணவி மன வேத்னையில் உள்ளார். மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.