Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீட்சாவை திருமணம் செய்த இளம்பெண்....

Advertiesment
பீட்சாவை திருமணம் செய்த இளம்பெண்....
, திங்கள், 30 ஜனவரி 2017 (15:51 IST)
தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், ஒரு இளம்பெண் பீட்சாவை திருமணம் செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரில் வசிப்பர் கிறிஸ்டின் வாக்னர்(18). இவருக்கு பீட்சா சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதோடு விட்டுவிடாமல், பீட்சாவையே திருமணம் செய்வது என அவர் முடிவெடுத்தார்.
 
எனவே, திருமணப் பெண் போல் அலங்காரம் செய்து கொண்ட அவர், பீட்சாவிற்கு டை கட்டி மணமகன் போல் அலங்கரித்தார். அதன், பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி, தனக்கு திருமணம் ஆகிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள் ஆண்களே’ என குறிப்பிட்டுள்ளார்.

webdunia

 

 
இதை அறிந்த ஒரு புகைப்படக்காரர், கிறிஸ்டினாவை வைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தினார். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
பீட்சாவை திருமணம் செய்து கொள்வது இது முதல் முறையல்ல. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்யாவை சேர்ந்த ஒரு வாலிபர் பீட்சாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல், கனடாவை சேர்ந்த ஒரு இளம்பெண் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம், பீட்சாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் பதவியை மண்டியிட்டு பிச்சை கேட்கும் நடராஜன்: திமுக காட்டம்!