Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமியை கடத்தி பலாத்கார முயற்சி; தப்ப முயன்றபோது கழுத்தை அறுத்த பயங்கரம்

Advertiesment
சிறுமியை கடத்தி பலாத்கார முயற்சி; தப்ப முயன்றபோது கழுத்தை அறுத்த பயங்கரம்
, சனி, 25 ஜூன் 2016 (18:58 IST)
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்கார முயற்சி செய்தபோது தப்பிய சிறுமியின் கழுத்தை அறுத்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 

 
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் 11 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த அசோக் குமார் (30) என்ற வாலிபர் சிறுமியை கண்காணித்துக் கொண்டிருந்துள்ளார். பின்னர் சிறுமி வயல் பகுதிக்கு செல்லும் நேரம் பார்த்து அவரை அசோக் குமாரும் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
 
இந்நிலையில், அசோக்குமார், சிறுமியை வாயை பொத்தி மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து, அசோக் குமாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த அசோக் குமார், சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். உடனே கழுத்தில் இருந்து ரத்தன் குபுகுபுவென வெளியேறியுள்ளது. இதில், சிறுமியும் மயக்கம் அடைந்துள்ளார்.
 
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்ததும், அசோக்குமாரை பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். இதையடுத்து அசோக்குமார் நெமிலி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
 
சிகிச்சைக்காக சிறுமி காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அசோக்குமாரை கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கான தடை நீங்குகிறது