Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கிய காயத்ரி ரகுராம்

Advertiesment
மதுபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கிய காயத்ரி ரகுராம்
, ஞாயிறு, 25 நவம்பர் 2018 (18:13 IST)
கோலிவுட் திரையுலகின் நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம், கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் மூலம் நெகட்டிவ்வாக பிரபலமானார். ஓவியாவுக்கு இவர் கொடுத்த டார்ச்சரால் மக்களின் பார்வையில் வில்லியாக காணப்பட்டார். தற்போது காயத்ரி ரகுராம் ஒருசில திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை திரு.வி.க.பாலம் பகுதியில் நேற்றிரவு மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராமை போலீசார் பிடித்து விசாரணை செய்ததாகவும், அதன் பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் அவருக்கு ரூ3500 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

webdunia
பிரபல செய்தி தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது டுவிட்டர் பக்கம் மூலம் சமூக கருத்துக்களை தெரிவித்து வந்த காய்த்ரியா குடிபோதையில் சிக்கியது? என டுவிட்டர் பயனாளிகள் சிலர் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.25 ஆயிரம் கோடி தராவிட்டால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் : பிரதமருக்கு வைகோ எச்சரிக்கை