நடிகர் கமல்ஹாசனுடனான பிரிவு குறித்து நடிகை கவுதமி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கமல்ஹாசனுடன் 13 வருட வாழ்க்கைக்கு பிறகு இந்த பிரிவு எனக்கு நெஞ்சை உடைக்கும் சம்பவாக இருக்கிறது. எனக்கும், அவருக்கும் உள்ள வாழ்க்கை எண்ணங்கள் வேறுபடுவதால், இருவரும் அனுசரித்து போக வேண்டும் அல்லது அவரவர்கள் பாதையில் பயணிக்க வேண்டும்.
இதை நான் கடந்த இரண்டு வருடங்களாக யோசித்து வந்தேன். பின்னர் இந்த முடிவெடுத்தேன். எல்லாவற்றையும் தாண்டி நான் முதலில் ஒரு தாய், என் குழந்தைக்கு சிறந்த தாயாக இருப்பது எனது கடமை.
நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு இருந்தே கமல்ஹாசனின் தீவிர ரசிகர். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அதுவும் ஆடை வடிமைப்பாளராக அதிக அனுபவம் கிடைத்தது.
கடந்த 29 வருடத்தில் அவருடைய அன்பும், அதரவு எனக்கு கிடைத்தது. என் வாழ்க்கை பயணத்தில் அவர் பல வழிகளாக இருந்தார், என்று உருக்கமாக எழுதியுள்ளார்.