Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலுக்கு அறிவுரை வழங்கிய கௌதமி: யோசித்து முடிவெடுத்தால் நல்லது!

கமலுக்கு அறிவுரை வழங்கிய கௌதமி: யோசித்து முடிவெடுத்தால் நல்லது!

கமலுக்கு அறிவுரை வழங்கிய கௌதமி: யோசித்து முடிவெடுத்தால் நல்லது!
, புதன், 26 ஜூலை 2017 (14:07 IST)
நடிகர் கமல் சமீப காலமாக அரசியல் குறித்த விமர்சனங்களும், கருத்துக்களும் அதிகமாக கூறி வருகிறார். தமிழக அரசை பற்றி விமர்சித்த கமலுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தது. அதற்கு கமல் பதிலடி கொடுத்தது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.


 
 
இதனையடுத்து கமல் அரசியலுக்கு வருவாரா? ரஜினி அரசியலுக்கு வருவாரா? யார் முதலில் வருவார்? என பல விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கமலை விட்டு பிரிந்து வாழும் நடிகை கௌதமியிடம் கமலின் அரசியல் குறித்தான பேச்சு குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த கௌதமி, கமல், ரஜினி இருவரும் யோசித்து முடிவெடுத்தால் நாட்டுக்கு நல்லது. நல்ல விஷயங்கள் இருக்கும் இடத்தில் கெட்ட விஷயங்களும் இருக்கும். தப்பு செய்கிறவர்களும், நல்லது செய்கிறவர்களும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள்.
 
கமல் சொல்லி வரும் கருத்துகள் அவரது சொந்த கருத்து, கருத்து கூற அவருக்கு உரிமை உள்ளதால் அதில் யாரும் தலையிட முடியாது. அவரது கருத்துகள் தவறு என்று சொல்ல மாட்டேன். யார் அரசியலில் ஈடுபட்டாலும் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.
 
அரசியலுக்கு வருபவர்கள் என்ன காரணத்துக்காக வருகிறார்கள், நோக்கம் என்ன, என்ன பிரச்சையை முன்வைக்கிறார்கள், அதனை எப்படி தீர்ப்பார்கள் என்பதை கவனிக்கும் பொறுப்பு குடிமக்கள் என்ற முறையில் எனக்கு இருக்கு. ரஜினி, கமல் இருவருமே நன்கு யோசித்து முடிவெடுத்தால் மக்களின் முன்னேற்றமும், நாட்டின் நலனும் சிறப்பாக அமையும் என கௌதமி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலை மிரட்டல் ; பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் வெளியேற்றம்