Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலிண்டர் வெடிப்பு மரணங்கள்! இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம்!

Advertiesment
சிலிண்டர் வெடிப்பு மரணங்கள்! இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம்!
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:47 IST)
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஏற்பட்ட சிலிண்டர் வெடித்த விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விபத்தில் 346 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 96 பேர் ஆண்கள், 250 பெண்கள் ஆவர். இரண்டாவது இடத்தில் கர்நாடகமும், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன.

மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று தந்தை பெரியார் பிறந்த நாள்: டுவிட்டரில் வாழ்த்துக்களும் எதிர்ப்புகளும்!