Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்- ஜி.வி. பிரகாஷ் கண்டனம்

ஜி.வி. பிரகாஷ்
Webdunia
செவ்வாய், 22 மே 2018 (19:29 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிக்சூடு நடத்தியதற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ்.
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லை ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். 
 
அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.
 
இந்நிலையில், இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ஜி.வி பிரகாஷ் “சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரூபாய்க்காக உயிரை பலி கொடுத்த 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்..!

செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக கூட்டத்தில் அடிதடி.. ஈரோட்டில் பரபரப்பு..!

போராட்டம் செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையில் அடையுங்கள்: டிரம்ப் உத்தரவு..!

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

10 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments