Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீலகிரியில் உறைபனி நீடிக்கும் - தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Advertiesment
நீலகிரியில் உறைபனி நீடிக்கும் - தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Senthil Velan

, வியாழன், 18 ஜனவரி 2024 (13:48 IST)
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு உறைபனி நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18.01.2024 மற்றும் 19.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
20.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 21.01.2024 முதல்  24.01.2024 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

webdunia
 
உறைபனி எச்சரிக்கை:
 
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான  முன்னறிவிப்பு:
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின்  ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்குள் பேருந்துகளை இயக்க அவகாசம் வழங்குக..! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை..!!