Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 6 நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva
திங்கள், 15 ஏப்ரல் 2024 (14:19 IST)
தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை முதல் ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதாகவும் டெல்டா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் நாளை முதல் அதாவது ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை தமிழக முழுவதும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், 17ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
எனவே நாளை முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் வறண்ட வானிலையை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

கை ஒரு இடத்தில்.. கால் ஒரு இடத்தில்.. மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகன்..!

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments