Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (22:04 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து கோவை உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருப்பூரில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் டாஸ்மாக் மது கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பால் மருந்து பொருட்கள் மற்றும் காய்கறிகள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments