கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இன்று கூட சென்னையில் 1,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறைச் செயலாளராக அதிரடியாக இன்று ராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்
இதனை அடுத்து அவர் இன்று மாலை சுகாதார செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது ’சென்னையில் நாளை முதல் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் சென்னையில் 15 மண்டலங்களிலும் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த நடமாடும் மருத்துவமனை வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்
சென்னையில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டதால் நாளை முதல் பரிசோதனையின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டு இந்த 40 பேர் வெளியே சுற்றியதால் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் இதேபோன்று கோரணா தொற்று உள்ளவர்கள் தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் அவர்கள் வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்