Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (07:00 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழுநேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இன்று முதல் திரையரங்குகள் மூடப்பட வேண்டும், வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, பெரிய கடைகள் வணிக வளாகங்கள் மால்கள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே அனுமதி என்றும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மட்டும் பார்சல் பகுதி மட்டுமே ஓட்டல்களில் இயங்கவேண்டும். டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உண்டு 
 
ஆட்டோக்களில் இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி உண்டு என்பதும் கார்களில் மூன்று பேர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று முதல் தமிழக அரசு விதித்துள்ள நிலையில் வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments